இவர் யார்? 59-0510E 1. சகோதரனே, உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய வீட்டிற்கு வருவது மிகவும் அருமையானதாக இருக்கிறது. 2 கொஞ்ச காலத்துக்கு முன்னர், நான் சில வேதவாக்கியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது என்று நான் நினைக்கிறேன், இயேசுவானவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அதாவது சீஷர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவர்கள் தூரத்தில் அந்த பரிசுத்த நகரத்தை கண்டு, “இப்பொழுது இராஜ்யம் திரும்ப அளிக்கப்படும்” என்று, அவர்கள் கூறி, களிகூரத் துவங்கினர் என்று அதில் கூறப்பட்டிருந்தது. 3 சமீபத்திய பாலஸ்தீன விஜயத்தைக் குறித்து இந்த குறிப்பிட்ட மனிதன் கூறிக்கொண்டிருந்தார், இல்லை பேசிக் கொண்டிருந்தார், அவர் ஜனங்களிடத்தில் இப்பொழுது, கடந்த வருடத்தில், அந்த ஒரு இடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் அந்த பள்ளத்தாக்கில் இருந்து வந்தபோது அந்த வளைவை சுற்றி நோக்கிப் பார்த்து, இயேசுவும் சீஷர்களும் அந்த நேரத்தில் இருந்த அதே சாலையில் இருந்தனர் என்றும், அவர்கள் அந்த பட்டிணத்தை நோக்கிப் பார்த்தபோது, அவர்கள் அழத் தொடங்கினர் என்றும் கூறினார். 4 உங்களுக்குத் தெரியுமா, அந்த சீஷர்களிடத்தில் ஏதோ ஒரு காரியம் இருந்தது என்றே, நான் நினைக்கிறேன், அந்த நாட்களில், அந்த—அந்த இராஜ்ஜியம் மீண்டும் திரும்பளிக்கப்படும் என்று, உணர்ந்தனர். 5 இப்பொழுது அதற்கு கிட்டத்தட்ட நேரம் வந்துவிட்டது. இராஜ்ஜியம் கிட்டத்தட்ட மீண்டும் திரும்ப அளிக்கப்படும் என்ற, அந்த உணர்வு ஜனங்களின் மேல் இருந்தது என்று நான் நம்புகிறேன். 6 சகோதரன் நெவில், நம்முடைய கருணையுள்ள மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட போதகர், ஒரு சில இரவுகள், இங்கே கூடாரத்தில் நடைபெறவுள்ள எழுப்புதல் கூட்ட முயற்சியைக் குறித்து, ஜெபிக்கும்படி என்னிடத்தில் பேசியிருக்கிறார். நான் அவரிடத்தில் கூறினேன், அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட காரியமாக இருக்கும் என்று நான் எண்ணினேன். 7 பல எழுப்புதல்கள் உண்டாயிருந்தாலும் உங்களுக்கு போதுமானதாயிருக்க முடியாது. பல சமயங்களில் நாம் ஒரு எழுப்புதலை குறித்த தவறான கருத்தினை பெற்றுக்கொள்கிறோம். ஒரு எழுப்புதல் புதிய அங்கத்தினர்களை அதிகமாக கொண்டு வருவதல்ல, ஆனால் அது நாம் ஏற்கனவே பெற்றுள்ளதை உயிர்ப்பிப்பதாயுள்ளது. மேலும் நான்… 8 நான் இதைக் கூற விரும்புகிறேன், ஏனென்றால் நான் இதை என் இருதயத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். அதாவது நீண்ட காலமாக இருந்து வந்ததைக் காட்டிலும் கூடாரத்தை சுற்றிலும் ஒரு வித்தியாசமான உணர்வு இருப்பதை நான் கண்டறியத் துவங்குகிறேன், நீண்ட காலத்துக்கு முன்னர், இருந்து வந்தது போன்ற, ஒரு ஆழமான ஆவிக்குரிய புலனைக் குறித்த—குறித்த ஒரு உணர்வு; அது ஒரு காரியத்தை தீர்த்து வைக்கிறது, அது ஒரு உண்மையான அஸ்திபாரத்தைப் பெற்றுள்ளது. தேவன் அந்த சிறிய சபையை, மற்றும்…?…மீண்டும் அதனுடைய வல்லமையில் ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். 9 கட்டிடத் திட்டம் நடந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன், அது ஒரு பெரிய காரியம் என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால், விரைவிலோ அல்லது பின்னரோ, வயோதிக ஜனங்களாகிய நாம் சர்வாயுதவர்க்கத்தை எடுத்து அதை நம்முடைய பிள்ளைகளின் கரங்களில் திரும்ப கொடுத்துவிட்டு, அந்தப் பொன்னான படிகளில் நடந்து செல்லப் போகிறோம். 10 அன்றொரு நாள் நான் இப்பொழுது பாதி-தூர எல்லையை, ஐம்பது வயதினைக் கடந்துவிட்டேன். என்னால் அதை தெளிவாக உணர முடியவில்லை. நான் கிட்டத்தட்ட பதினெட்டு, பதினாறு, பதினெட்டு வயதாக இருக்கும்பொழுது கிறிஸ் மெய்ஸ்னருக்கு மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்வது முதற்கொண்டு இருந்து வந்த காலம் அதிகமாகக் கடந்துவிட்டது போல இது தென்படவில்லை. ஆனால் காலமோ எவ்வளவோ கடந்துவிட்டது. நிலையான நகரம் இங்கு நமக்கு இல்லை, ஆனால் வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் என்பதையே இது காண்பிக்கிறது. அந்த நகரத்தை தேவனே கட்டுபவராயிருக்கிறார், அங்கே ஒருபோதும் முடிவு இராது. 11 இந்த காலையில், அன்னையருடைய தினம் என்னும் பொருளின் பேரில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, தாயார் முதிர்ந்த வயதில் சுருக்கங்களுடன் மற்றும் இந்த எல்லாவற்றோடும் இருப்பது போன்றதல்ல அவளுடைய உண்மையான நிலை என்றும், அவளுடைய ஊன்றுகோல்கள், அல்லது பழைய சக்கர நாற்காலி, அல்லது கைப்பிடி நாற்காலி மற்றும் அவளுக்கு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு மலர் குவளை போன்றவற்றோடு தாயார் இல்லை என்றும்; ஆனால் உயிர்த்தெழுதலில் தாயார், மீண்டும் திரும்பளிக்கப்பட்ட தன்னுடைய இளமையில், நின்று கொண்டு, ஒரு இராணியைப் போல பிரகாசிப்பாள் என்று கூறினேன். அந்த விதமாகத்தான் நான் என்னுடைய தாயாரை குறித்து நினைக்க விரும்புகிறேன். இன்றைக்கு அவள் வயோதிகமாய் உள்ளதைப் போன்று, அவளை குறித்து நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. என்ன வரப்போகிறது என்பதைக் குறித்தே நான் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன். நீங்களும் உங்களுடைய தாய்மார்களைக் குறித்து அந்த விதமாகவே உணருகிறீர்கள் என்றே நான் அறிவேன். அவள் உண்மையாகவே அவளுடைய இருதயத்தில் உள்ளதைப் போன்று அவளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இருந்தாலும் அநேக…புலவன் கூறுகிறது போல, “வாழ்க்கை அவளுக்கு எளிதானதாக இருந்திருக்கவில்லை, ஆனால் உங்களுக்காக ஏதோ காரியத்தைச் செய்ய, அவள் மீண்டும் ஜீவிப்பாள்.” அவள் உங்களோடு என்றென்றும் ஜீவிக்கும்படியாக தேவன் அதற்கு ஒரு வழியை உண்டுபண்ணப் போகிறார். எனவே நான் அதை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 12 ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, நான் இந்த அறிவிப்பை, இந்த காலையில் செய்தேன், அதாவது கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்று இரவு இவர் யார்? என்பதன் பேரில் பேச உள்ளேன்: நிச்சயமாகவே நான் அதை எப்படி பேசப்போகிறேன் என்று தெரியாது. ஆனால் மதியம் முழுவதும் நேர்முக பேட்டிகளின் பேரில், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரையில் நான் ஓய்வற்ற பணியிலிருந்து வந்தேன், மேலும் விசேஷித்த மற்றும்—மற்றும் அவசர அழைப்புகள் வந்திருந்தன. என்னால் அவைகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. 13 மேலும் மருத்துவர் சாமுக்காக நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்—அவர் நலம் அடைந்து கொண்டு வருகிறார், அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். மேலும் மருத்துவர் பால்ட்வின் மற்றும் திருமதி. பால்ட்வின் இருவரும் குணம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் நலமடைந்து வருகின்றனர். 14 இந்தப் பிற்பகலில், உங்களுடைய ஜெபப் பட்டியலில் நீங்கள் புதிதாக ஒன்றை சேர்த்துக் கொள்ளும்படி நான் விரும்புகிறேன். அது இங்குள்ள மருந்துக் கடைக்காரர் ஹாரி லீஸ் ஆகும். ஹாரி என்னுடைய தனிப்பட்ட ஒரு நண்பர். நான் அவரை அறிந்திருந்த வரைக்கும், இந்த பிற்பகல் வரைக்கும் அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தார் என்றே நான் எண்ணியிருந்தேன், ஆனால் அவருடைய சகோதரன் அவருடைய ஆத்மா இரட்சிப்புக்காக வேண்டுகோள் விடுத்தார். இங்குள்ள நம்முடைய தர்மகர்த்தா சகோதரன் மைக் ஈகன் அந்த செய்தியை கொண்டு…கொண்டு வந்தார். மேலும் ஹாரி மருத்துவமனையில், ஒரு ஆபத்தான நிலைமையில் இருக்கிறார். அவர் என்னை குறித்து அதிகமாக நினைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், இந்த பிற்பகல், அவர் தன்னுடைய சொந்த போதகரை இல்லை அவர் போகிற சபையின் போதகரை நிராகரித்து விட்டார், மேலும் நான் அவரை பார்க்க வர வேண்டும் என்று விரும்பினாராம். நான் போய் அவரைப் பார்க்க விரும்புகிறேன். எனவே ஹாரிக்காக ஜெபியுங்கள். 15 இன்றிரவு ஜார்ஜியாவிலிருந்து இங்கு வந்துள்ள, என்னுடைய நண்பர்களான, சகோதரன் வெல்ச் ஈவான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினரையும் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனக்கு தெரியாத மற்ற வருகையாளர்களையும், கூட நான் காண்கிறேன், அநேகமாக இந்த காலையில் அவர்கள் இங்கே இருந்திருக்கலாம். 16 நான் தவறாக நினைக்கவில்லையென்றால், அரிசோனாவிலுள்ள, ஃபீனிக்ஸிலிருந்து வந்து அங்கே பின்னால் உள்ள சகோதரன் மற்றும் சகோதரி எல்மர் காலின்ஸ்ஸையும் நான் காண்கிறேன். ஓ, நீங்கள் மாற்றமடைந்திருக்கவில்லை. நீங்கள் உங்களுடைய இரயில் பாதை ஆடைகளை அணிந்து மேலும்—மேலும் இரயில் பாதையிலிருந்து வருவது போன்றே காணப்படுகிறீர்கள். வீட்டிற்கு திரும்பி வர வரவேற்கப்படுகிறீர்கள்! நீங்கள் இங்கேயே தங்கியிருக்கும்படி நான் கேட்க முடியாது, ஏனென்றால் நீங்கள் ஃபீனிக்ஸில், ஒரு நல்ல இடத்தை கண்டடைந்தீர்கள், பாருங்கள், அது மிகவும் அருமையானது. என்றாவது ஒரு நாள், நானும், அங்கே வசிக்க விரும்புகிறேன். 17 அதன்பின்னர் நான் இங்கே, அங்குள்ள, தேவனுடைய சபையைச் சேர்ந்த சகோதரன் ஸ்மித்தை இங்கு காண்கிறேன். சகோதரன் ஸ்மித், உங்களுடைய சிறு புத்தகம், இல்லை நேற்று பிற்பகல், தாமதமாக, அது என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை, ஆனால் நீர் அதை எழுதினீர் என்று நான் அறிந்தவரை, நான் நிச்சயமாக அதை ஆதரிப்பேன். அது உண்மையான, உண்மையான வேதவாக்கியமாய் இருக்கவேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் அது ஒரு வெற்றிகரமானதாயுள்ளது என்றே நான் நம்புகிறேன். 18 மேலும் மற்ற அநேகரை, என்னால் கூற முடியும். நீங்கள் யாவரும் இங்கே கூடாரத்தில் வரவேற்கப்படுகிறீர்கள். இந்தக் காலை, “அவர் அவளை பின்னல் ஜன்னலின் வழியாக, நோக்கிப் பார்க்கிறார்” என்று சகோதரி ஸ்டிரிக்கர் பாடின பாடலைக் கேட்டு ரசித்தேன். என்னுடைய மெனோனைட் சகோதரர்கள், அவர்கள் இங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், ஓ, நீங்கள் எல்லோருமே! இல்லினாய்ஸ்ஸிலிருந்து இங்கு வந்துள்ள, ஒரு நண்பர், அவருடைய மகன் பின்னால் ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார், அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று, நான் நினைக்கிறேன். மேலும் அநேகர், நான்…நான் உங்கள் பெயரை அழைக்கவில்லை என்றால் நான் உங்களை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று நினைக்காதீர்கள், ஆனால் நான் உங்கள் யாவரையும் வரவேற்கிறேன். 19 ஒரு வேத பாடத்துக்காக, நாம் இப்பொழுது இன்றிரவு வாசிப்போமாக, மத்தேயு 21-ம் அதிகாரத்திலிருந்து, 1-ம் வசனம் தொடங்கி, 11-ம் வசனம் உள்பட, தொடர்ந்து கீழே வாசிப்போமாக. அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு,…வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்களுக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்:…நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 20 ஓ கர்த்தாவே, நாங்கள் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தால், நாங்கள் என்ன கூறியிருந்திருப்போம் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். ஆனால் அவர் வருவதற்காக நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், நாங்கள் ஒரு மகத்தான நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் கர்த்தாவே, நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், எங்களுடைய இதயங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கையில், உள்நாட்டிலும் வெளி நாட்டிலும், அறுவடை வயல்களிலிருந்து நாங்கள் சேகரிக்கக் கூடிய அனைத்து அரிக்கட்டுகளையும் கொண்டு வருகிறோம், ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து, மகிமையின் நுழைவாயிலில் இருந்து இறங்கி, அவர் வருவதை நாங்கள் காண்போம் என்ற அந்த நேரத்தின் பேரிலான எதிர்பார்த்தலில், எங்களுடைய இந்த பழைய அழிவுக்கு ஏதுவான சரீர அமைப்பு அவருடைய ஒரு மகிமையின் சரீரத்துக்கு ஒப்பாக மாறுவதையே, நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், அங்கே பாவமோ அல்லது மரணத்தின் அறிகுறியோ எப்போதும் உட்பிரவேசிக்க முடியாது. அவர் இருக்கிறவண்ணமாக நாங்கள் அவரைக் கண்டு, வரப்போகும் எல்லா காலங்களினூடாக அவரை நேசித்து, ஜீவிப்போம். 21 நாங்கள் இந்த சபைக்காகவும், இதனுடைய போதகருக்காகவும், தர்மகர்த்தாக்களுக்காகவும், உதவிக்காரர்களுக்காகவும், இங்கு வருகிற ஒவ்வொரு நபருக்காகவும்; மற்றும் எங்களுடைய வாசலில் இருக்கிற வருகையாளர்களுக்காகவும், மற்றொரு தொழுவத்திலிருந்து வந்தும், ஒரே மந்தையின் ஆடுகளாயுள்ளவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய பிரசன்னத்தினால், இன்றிரவு, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். 22 நாங்கள் எப்போதும் இருந்து வந்ததைக் காட்டிலும் மேலான கிறிஸ்தவர்கள் என்ற உறுதியோடு, இன்றிரவு, நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்லும்படியாய், உம்முடைய வார்த்தையில் எங்களை போஷியும். நாங்கள் எங்களுடைய இருதயத்தில் ஒரு புதிய நம்பிக்கையோடும், மற்றும் சந்தோஷத்தோடும், அவருடைய வருகைக்காக காத்திருக்கும்படி செல்வோமாக. 23 தற்செயலாக எங்கள் மத்தியில் சுகவீனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களாய் சிலர் இருப்பார்களாயின், நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்க மறக்கமாட்டோம். அதாவது அவர்கள்…நாங்கள் ஆராதிப்பதற்காக கூடியிருக்கிற, இந்தக் கட்டிடத்திற்க்குள், இன்றிரவு வந்து, உள்ளே வந்து, சுகவீனமாயிருப்பவர்கள், சுகத்தோடு வெளியே செல்வார்களாக. 24 மேலும் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும், மற்றும் துன்பத்தின் படுக்கைகளில் இருந்தும், சுகவீனத்திலிருந்து சுகமடைய வேண்டியவர்களுக்காகவும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். ஓ தேவனே, உம்முடைய இரக்கம் அவர்களை சென்றடைய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 25 இன்றிரவு, அலட்சியமாய் இருக்கிறவர்களுக்காகவும், கர்த்தர் நல்லவர் என்பதைக் கண்டு இன்னும் ருசிபார்த்திராதவர்களுக்காகவும், தேவனால் நேசிக்கப்படுவது என்பது எதைப் பொருட்படுத்துகிறது என்பதை அறியாமலிருப்பவர்களுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் எதைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரகளுக்குப் புரியவில்லை. ஓ தேவனே, ஒரு வானொலி ஒளிபரப்பில், அல்லது ஏதோ ஒரு வழியில், அவர்களுடைய இருதயங்கள் தொடப்படுவதாக, உம்முடைய இரக்கத்தின் கதவு மூடப்பட்டு அவர்கள் வெளியே தள்ளப்பட்டு, இரக்கமில்லாமல் நியாயத்தீர்ப்பில் நிற்பதற்கு முன்பே அவர்களுடைய உணர்ச்சிகள் உம்மிடம் திருப்பப்படுவதாக. 26 கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் இந்த காரியங்களை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபித்து, அவருடைய மகிமைக்காக நாங்கள் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 27 வாசல்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டமாக இருந்தனர், தெருக்களில் நெரிசல் ஏற்பட்டது, மேலும் ஜனங்கள் உறங்குவதற்கான இடம் கூட அங்கு இல்லை. அவர்கள் மதில்சுவற்றிக்கு வெளியே, மைதானங்கள் முழுவதிலும் படுத்திருந்தனர், ஏனென்றால் இது பஸ்கா பண்டிகையாயிருந்தது. இந்த நேரத்தில் வழிபட, அறியப்படுமளவிற்கு உலகெங்கிலுமிருந்து ஜனங்கள் வந்திருந்தனர். அது பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்படும் நேரமாயிருந்தது. மேலும்…அடிமைத்தன, எகிப்திலிருந்து வந்த அவர்களுடைய விடுதலையை அது சுட்டிக்காட்டினது. அவர்கள் ஆண்டு தோறும், இதைக் கைக்கொண்டு வந்தனர். ஒவ்வொரு வருடமும், இந்த மகத்தான பஸ்கா பண்டிகை நடைபெற்றது. மேலும் இது மிகச் சிறந்த காலங்களில்…அல்லது யூத மார்க்கத்தின் நிகழ்வுகளில் ஒன்றாயிருந்தது, ஏனென்றால் அது அவர்கள் விடுவிக்கப்பட்ட நேரத்தைப் பொருட்படுத்தியது. 28 எல்லா ஜனங்களுமே, அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தை குறித்து சிந்தித்துப் பார்க்க விரும்புகின்றனர். நாம் ஒவ்வொருவரும், இன்றிரவு, நாம் விடுவிக்கப்பட்டிருந்த நேரத்துக்கு எப்படியாய் திரும்பிச் செல்ல முடியும்! அது நமக்கு எதை பொருட்படுத்தினது! 29 என்னுடைய சொந்த அனுபவத்தில், எப்படியாய் என்னுடைய பரிதாபமான வாலிப இருதயமானது தேவனை தொட ஏங்கியது என்று என்னால் நினைவுகூர முடியும். நான், “ஓ, நான் மேலே சென்று அவருடைய கதவை தட்டி, சிறிதுநேரம் அவரிடத்தில் பேச முடிந்தால் நலமாயிருக்குமே!” என்று எண்ணினேன். மேலும், நிச்சயமாகவே, நீங்கள் என்னுடைய சுயசரிதையை அறிவீர்கள். நான் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு, என்னால் அவரிடத்தில் பேசமுடியாதபடியால், ஒரு கடிதத்தை அவருக்கு எழுதப்போவதாக இருந்தேன். அவர் காடுகளில் இருந்ததை நான் அறிந்திருந்தேன், ஏனென்றால் நான் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தேன், மற்றும் காடுகளில் அவருடைய அசைவை நான் கண்டிருக்கிறேன். மேலும் ஒரு—ஒரு குறிப்பிட்ட, நான் வேட்டையாடும்போது அல்லது மீன்பிடிக்கச் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட பழைய பழக்கமான பாதையில் செல்வதுண்டு. அப்பொழுது நான், “திரு. இயேசு என்று எழுதி, அதை மரத்தின்மேல் ஆணியடித்து மாட்டலாம்” என்று எண்ணினேன். ஏதோ ஒரு வழியில் என்னுடைய இருதயத்திலிருந்த அந்த பாரத்தை இறக்கும்படியான ஏதோ ஒரு வழி. 30 ஓ, அந்த இரவு, அப்பாலே! நான் என்னுடைய வயதை மறந்துவிடலாம், நான் சில நேரத்தில் என்ற பெயரையும் கூட மறந்துவிடலாம், ஆனால் பாவத்திலிருந்து அவர் என்னை விடுவித்த அந்த நேரத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. ஏதோ காரியம், எனக்கு உட்புறத்திலே சம்பவித்தது, அது அந்தகாரத்தில் அந்த பெரிதான நேரங்கள் முழுவதும் எனக்கு உதவி செய்து வந்துள்ளது. அந்த என்னுடைய விடுதலையின் நேரத்தில் பாவ பாரங்கள் என்னை விட்டு விலகினது, அப்பொழுது நான் ஒரு புதிய நபராயிருந்தேன். அது முதற்கொண்டு, நான் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக இருந்து வருகிறேன். 31 மேலும் இந்த யூதர்கள், அவர்கள் ஒவ்வொரு வருடமும், வருகின்றனர். அங்கே தேவாலயத்தின் உட்புறத்தில் ஒரு—ஒரு ஊற்று இருந்தது. அவர்கள் அந்த—அந்த அப்பத்தையும், கசப்பான கீரைகளையும், ஆட்டுக்குட்டியையும் கொண்டு சென்று, அவர்கள் தேவாலயத்திற்குள்ளிருந்த இந்த ஊற்றிலிருந்து பருகினர். தேவன் அவர்களிடத்தில் தயை காட்டியிருந்தபடியால் அவர்கள் ஒன்று சேர்ந்து களிகூர்ந்தனர். எனவே, இந்த பஸ்கா நேரத்தில், இது பஸ்காவாய் மாத்திரமல்லாமல் ஒரு விசேஷித்த பஸ்காவாயிருந்தது. 32 உங்களுக்குத் தெரியும், நாம் சில நேரத்தில் சபைக்கு செல்லுகிறோம் மற்றும்…நாம் எப்பொழுதுமே செல்ல விரும்புகிறோம், ஆனால் சில நேரங்களில் சிறப்பான ஏதோ காரியம் சம்பவிக்கிறது. 33 இது அந்த நேரங்களில் ஒன்றாய் இருந்தது. அது இன்றைக்கு உள்ளது போல, முழுவதும் எதிர்பார்ப்புகளால் நிறைந்து காணப்பட்டது. அவரை நேசித்தவர்களின் கண்கள் யாவுமே அவர் வாசலுக்குள் வருவதைக் காண காத்துக்கொண்டிருந்தன. 34 அவரை நேசிக்கிறவர்கள் அவருக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறபடியால், இன்றைக்கும் அந்த விதமான ஒரு பெரிய தொடர்புகொள்ளும் முறையே உள்ளது என்றே நான் நம்புகிறேன். முழு எதிர்பார்ப்போடிருந்தனர். 35 நாம் இந்த நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, உண்மையாகவே பூமியானது, ஒரு பெரிய பீப்பாயளவான தூளாகப் போகிறது. மேலும் விஞ்ஞானமோ, “நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன” என்று நம்மிடம் கூறிக் கொண்டிருக்கிறது. அன்றொருநாள், இராணுவத்திலிருந்த தளபதியின் கதையை, நான் படித்துக் கொண்டிருந்தது போலவே, நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன், அதாவது, “மற்றொரு யுத்தம் உண்டாகுமானால் அது வெறுமனே இரண்டு அல்லது மூன்று நிமிடங்களே நீடிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. பண்டைய யுத்த நாட்களில், துப்பாக்கிகளால் சுடுதல், நரிப் பள்ளங்களை தோண்டுல், அதோடு எல்லாம் முடிவுற்றுவிடும். அடுத்த யுத்தம் வெறுமென இரண்டு அல்லது மூன்று நிமிடங்களே இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். என்றோ ஒரு நாள், யாரோ ஒரு சரியில்லாத நபர் சற்றும் யோசனையின்றி அந்த அணுகுண்டுகளில் ஒன்றை வீசப் போகிறார். அவர்கள் அதைச் செய்யும்போது, அதற்கு எதிர்தாக்குதல் நிகழ்த்த, நாம் அதைக் கண்டறியக் கூடிய கருவிகளை எங்கும் உடையவர்களாயிருக்கிறோம். உலகத்தால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. 36 பஸ்காவில் இருந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒன்று சம்பவிக்கப்போவதாயிருந்ததை அறிந்திருந்தனர், ஆனால் அது என்னவாயிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 37 அது அந்த விதமாகவே இன்றைக்கும் உள்ளது. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் அது தெரியும். உங்களால் பாவியினிடத்தில் பேச முடியும், உங்களால் வியாபாரியினிடத்தில் பேச முடியும், உங்களால் எந்த ஒருவரிடத்திலும் பேச முடியும், மேலும், ஓ, இது உலகத்திற்கு அமைதியற்ற அப்படிப்பட்ட ஒரு நேரமாக இருக்கிறது. 38 ஆனால் அவருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிற, ஒரு மனிதனிடத்திலோ அல்லது ஸ்திரீயினிடத்திலோ நீங்கள் பேசினால், அவர்களுடைய முகத்தின் மீது மகிமை, பிரகாசிக்கின்றதைக் காணலாம். அந்த மகத்தான நிகழ்வுக்காக அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏதோ ஒன்று சம்பவிப்பதை எதிர்பார்த்து, முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது. என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை, ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையோ என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறிந்திருக்கிறது. சீக்கிரத்தில் எக்காளம் முழங்கும், ஒரு வெள்ளைக் குதிரையின் மேல், மகிமையிலிருந்து சவாரி செய்து, அவர் வருவதை நாம் காண்போம் என்றும், பரலோகத்தின் சேனைகள் அவரைப் பின்தொடரும் என்றும் அவர்கள் அறிவர். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆகாயத்தில் அவரை சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுவர். அதைத்தான் நாம் எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். 39 நாம் இந்த காலையில் பேசின, அந்த தாய்மார்களின் ஆத்துமாக்கள், போன்றவை, தேவனுடைய பலிபீடத்தின் கீழிருந்து, “கர்த்தாவே எவ்வளவு காலம்? எவ்வளவு காலம்?” என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. நீங்கள் தாயாரைக் காண விரும்புமளவிற்கு அவளும் உங்களை காண விரும்புகிறாள். நாம் நம்முடைய அன்பார்ந்தவர்களை சந்திக்க விரும்புவதுபோலவே அவர்களும் நம்மை சந்திக்க விரும்புகின்றனர். 40 அவர் வரும்போது, அது என்னே ஒரு மறு இணைப்பாயிருக்கும்! நம்முடைய அன்பார்ந்தவர்களை சந்தித்து மற்றும் அவர்களை அவர்களுடைய உயிர்த்தெழுந்த சரீரத்தில் கண்டு, மேலும் மகிமையடைந்து, உயிர்த்தெழுதலின் சுதந்திரவாளிகளோடு சுற்றி நடந்து, அவர்களுடைய குணாதிசயத்தை கவனித்து, அது எப்படி, சாந்தமாய் அமைதியாய் மாற்றப்பட்டிருக்கிறது என்பதையும் காண்போம். மேலும் அது ஒரு அமளியும் ஆரவாரமுமாயும், குதித்தலும் இழுத்தலுமாயிருக்காது, ஏனென்றால் நாம் ஒன்று சேர்ந்து ஜீவிக்க முழு நித்தியத்தை உடையவர்களாயிருப்போம். 41 ஓ, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த பெரிய நரம்புத்தளர்ச்சியான காலத்தில், எதற்குமே நேரமில்லை, ஏறுதல், இழுத்தல், பறித்தல், ஏன், இது ஒரு பயங்கரமான நாளாயிருக்கிறது. 42 அப்பொழுது, ஏதோ காரியம் சம்பவிப்பதற்காக அவர்கள் காத்திருந்தபோது, பஸ்காவில் இருந்தவர்களில் பலர் அவரைப் பார்க்காதது மிகவும் மோசமானதாக இருந்தது. அதே சமயத்தில், ஏதோ ஒன்று சம்பவிக்கப்போவதாயிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால் அதே சமயத்தில் அவர்கள் அவரைக் காணச் செல்லவில்லை. 43 அது கர்த்தருடைய வருகையிலும் அவ்வண்ணமாகவே இருக்கும். இன்றைக்கு, அமைதியற்ற அநேக ஜனங்கள், ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கின்றனர், ஆனால் அவர்கள்—அவர்கள் அவரை ஒருபோதும் காணமாட்டார்கள். ஏனென்றால் அவரைக் காண்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டும் காத்துக் கொண்டும், ஏங்கிக்கொண்டும் இருக்கிற அந்த சிறிய சபையை எடுத்துக்கொண்டு செல்ல, அவர் நள்ளிரவின் அமைதியில் வருவார். அவர்களைத்தான் அவர் வந்து கொண்டு செல்வார். கவர்ச்சியின் பேரில் வாழ்ந்து கொண்டிருக்கிற அநேக உலகத்தாரும், உலகத்தின் காரியங்களின் பெயரில் தங்களுடைய ஆத்துமாக்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறவர்களும் சபையானது மகிமைக்குள் செல்லும் வரையில் என்ன சம்பவித்தது என்பதை ஒருபோதும் அறியவேமாட்டார்கள், ஏனென்றால் அவர் இரவிலே ஒரு திருடன் வருகிற விதமாய் வந்து அவர்களைக் கொண்டு செல்வார். எனவே நாம் மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி விட்டோம் என்பதை நம்மால் காண முடியும். இப்பொழுது நாம் இந்த எதிர்பார்ப்புகளைக் கண்டறிகிறோம், அதாவது தேவன் அவர்களிடத்திற்கு வந்து…வேத வாக்கியங்களினூடாக முழுவதுமே, அது அதேக் காரியமாகவே இருந்து வந்துள்ளது. அதாவது அவர்கள்…அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, எப்பொழுதும் அவரைக் காண விரும்புகிறவர்களுக்கே அவர் எப்பொழுதும் பிரசன்னமாகிறார். இன்றிரவு நம்முடைய இருதயங்களில் அந்த நம்பிக்கை தான் உள்ளது என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 44 இது சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, நான் சில ஜனங்களிடத்தில் சாட்சி பகர்ந்து கொண்டிருந்தேன் என்று, நான் நினைக்கிறேன். மேலும் நான், “ஓ, அது குறித்து சிந்திக்கும்போது, அவர் எந்த நேரத்திலும் வருவார்!” என்றே கூறினேன். 45 என்னை அதைக் கூறும்படி தூண்டியது என்னவென்றால், நான் சகோதரன் பாஸ்வர்த்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் எண்பதுக்கும் மேற்பட்ட வயதிலிருந்த, அந்த பரிசுத்தவான் மரித்துக்கொண்டிருந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது, நான் அவரைக் காணச் சென்றேன். மனைவியும் நானும் அவர் மரிப்பதற்கு முன்பு அவரைக் காண…அங்கே சென்றோம். அப்பொழுது நான் அவரிடத்தில் ஏதோ ஒரு காரியத்தை கூற வேண்டியதாயிருந்தது. பரிசுத்தவான்கள் மகிமையில் பிரவேசித்துக் கொண்டிருக்கையில் நான் அவர்களைக் காண விரும்புகிறேன், நான் அவரைக் காண வேண்டியதாயிருந்தது. நாங்கள் காரின் டயர்கள் கிழிந்து போகுமளவிற்கு சென்றோம். 46 ஆனால் நான் அங்கு சென்றபோது, வாசலை நோக்கி விரைந்தேன், அந்த பண்டைய கோத்திரப் பிதா ஒரு சிறிய மூலையில் படுத்திருந்தார். நான் வருவதை அவர் கண்டபோது அவர் தன்னுடைய தலையை உயர்த்தினார். அவருடைய வயோதிக, தசைகள் தொங்கிக்கொண்டிருப்பதோடு, பலவீனமான கரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய கரங்களை எனக்காக நீட்டினார். நான் அவருடைய கழுத்தைச் சுற்றிப் பிடித்து, “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதங்களும் குதிரை வீரருமாயிருந்தவரே” என்று கதறினேன், ஏனென்றால் அவர் ஒரு பரிசுத்தமான, தேவபக்தியுள்ள மனிதனாய் இருந்தார். 47 மேலும் நான், “சகோதரன் பாஸ்வர்த், நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். நீர் சுகமடைந்துவிடுவீர் என்று நீர் விசுவாசிக்கிறீரா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “ஓ, நான் சுகவீனமாகவே இல்லையே” என்றார். அப்பொழுது நான், “பாருங்கள், காரியம் என்ன?” என்று கேட்டேன். 48 அப்பொழுது அவர், “நான் பரம வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றார். அவர், “நான் சோர்ந்து போயிருக்கிறேன், நான் களைத்துப்போயிருக்கிறேன். நான் பரம வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன்” என்றார். 49 அப்பொழுது நான், “அப்படியானால் நீங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் தெளிவாக உணருகிறீர்களா?” என்று கேட்டேன். மேலும் நான், “நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். எழுபது வருடத்துக்கும் சற்று மேற்பட்ட ஊழியக் காலங்களினூடாக, எது உங்களுடைய மிக மகிமையான நிமிடமாய் இருந்து வந்துள்ளது? அந்த வரிசையினூடாக, உங்களுக்கு என்ன அனுபவம் உண்டாயிருந்தது என்று எனக்குச் சொல்லுங்கள், ஐயா, நீங்கள் என்னிடத்தில், உங்களுடைய மகத்தான நேரம் என்று நீங்கள் எண்ணக் கூடியதை கூற முடியுமா” என்றேன். 50 நான் அவருடைய வயதுவரை ஜீவித்தாலும், அந்த கருமையான கண்கள் மூக்குக் கண்ணாடியின் மேலிருந்து என்னை உற்று நோக்கியதை, நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன். அப்பொழுது அவர், “என் அருமை சகோதரனே, இதுதான் என்னுடைய வாழ்க்கையின் மகத்தான தருணம். இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் மகிமையான வேறு எந்த நேரத்தையும் என்னால் எண்ணிப் பார்க்க முடியாது” என்றார். 51 நான் அவர் முகத்தை நோக்கி பார்த்தேன், மேலும் நான், “ஐயா, நீர் மரித்துக் கொண்டிருக்கிறீர் என்பதை நீர் இன்னும் அறிந்திருக்கிறீரா?” என்று கேட்டேன். 52 அதற்கு அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் இங்கே படுத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் அவர் வந்து அந்த வாசலைத் திறந்து, என்னை அவரோடு வீட்டிற்கு அழைத்துச் செல்லவே காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். அந்தவிதமாகத்தான் மரிக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் போயாக வேண்டும். 53 நீங்கள் அறிந்திருக்கிறபடி, அதாவது, அவர் மரிப்பதற்கு முன்னர் சுமார் இரண்டு மணி நேரங்களாக…அவர், இரண்டு நாட்களுக்கு மேலாக, ஒரு உணர்விழந்த முழு மயக்க நிலையில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் சுயநினைவை அடைந்தபோது, அவர் அறையில் எழுந்து, தன்னுடைய மனைவியினிடத்தில் பேசத் துவங்கினார். அதன்பின்னர், தீடிரென்று, அவர் எதையோ காண்பது போன்றுத் தென்பட்டது. அவர் தன்னுடைய சபையில் அவரால் மனமாற்றமடைந்து, மரித்து நாற்பது அல்லது ஐம்பது வருடங்களான, நண்பர்களோடு, ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து, அவர் கரங்களைக் குலுக்கினார். அவருடைய தாயோடும் மற்றும் அவருடைய தந்தையோடும் கரங்களைக் குலுக்கினார். அவருடைய சரீரத்தை விட்டு ஜீவன்…அவருக்குப் போகும் வரையில், தலையணையின் மேல் படுத்துக்கொண்டு, கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் உறங்கச் சென்றார். அவரை எதிர்பார்த்து, அவருக்கு சேவை செய்வது போன்றது எதுவுமே இல்லை. 54 நான் இந்த மனிதனிடத்தில் இதைக் குறித்துப் பேசி, அந்த அனுபவத்தைக் கூறினபோது, நான் இதைக் கூறினேன். நான், “ஐயா, ஓ, நாம் அவரைக் காணும்போது அது மகிமையானதாய் இருக்காதா? ஓ, அவர் இன்றைக்கு வருவாரானால் நலமாயிருக்குமே!” என்றேன். அதற்கு அவர், “சகோதரன் பிரான்ஹாமே, அந்த விதமாக ஜனங்களை பயமுறுத்தாதீர்” என்றார். அப்பொழுது நான், “நீர் என்னப் பொருட்படுத்திக் கூறுகிறீர்?” என்றேன். 55 அதற்கு அவர், “ஓ, உலகம் முடிவடைந்து கொண்டிருக்கிறது, அல்லது கிறிஸ்து வருகிறார் என்றும் ஜனங்களிடத்தில் சொல்ல முயற்சிக்காதீர்கள். அது அவர்களை கவலையடையச் செய்கிறது” என்றார். 56 “ஓ,” நான், “இல்லை. நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன். அவருக்காக எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, அது அவர்கள் கேட்கக்கூடிய மிக மகிமையான செய்தியாக இருக்கிறது, அதாவது இயேசு தம்முடைய சபையை எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட வெளிப்பட இருக்கிறார்” என்றேன். வயோதிகம் வாலிபமாக மாற்றப்படும். இருளுக்குப் பதிலாக சந்தோஷம் அளிக்கப்படும். மரணத்துக்குப் பதிலாக ஜீவன் அளிக்கப்படும். அழிவுள்ளது அழியாமையாய் மாற்றப்படும். ஓ, அவர் வருவதை அறிந்துகொள்வது, என்னே ஒரு தருணம்! 57 அவர்கள் அவருக்காக எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் வந்தபோது, இரண்டு பிரிவுகள் இருந்தன என்பதை நாம் கண்டறிந்தோம். ஒரு குழு அவருக்காக இருந்தது, ஒன்று அவருக்கு எதிராக இருந்தது. 58 அந்த விதமாகவே நாம் இன்றைக்கும் அதைக் கண்டறிகிறோம். அப்படிததான், அவருடைய வருகை, எப்பொழுதும் ஜனங்களை பிரித்துவிடுகிறது. ஒவ்வொரு முறையும், நீங்கள் இயேசுவை காணும்போது, அதனோடு முரண்பாடாயிருப்பவர்கள் சுற்றியிருப்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள். அது சாத்தானாகும். மேலும், இன்றைக்கு, நாம் அதைக் குறித்து சிந்திக்கும்போது, நாம் அதிக மாற்றத்தைக் காண்கிறதில்லை. அதே விதமாகவே உள்ளது. ஜனங்கள் மாறியிருக்கின்றனர், ஆனால் ஜனங்களின் ஆவி மாறியிருக்கவில்லை. 59 எனவே அவர்கள் முடிவிலே வாசலுக்கு வெளியே, அந்த சிறிய, வெள்ளை கழுதையின் மேல், அவர் சவாரி செய்து வருவதைக் கண்டபோது, சீஷர்கள், “பரலோக இராஜ்ஜியம் வந்துவிட்டது” என்று கூச்சலிடத் துவங்கியதில் வியப்பொன்றுமில்லையே! ஜனங்கள் அவரைச் சந்திக்க ஓடினர், எருசலேம் முழுவதும் கலக்கமடைந்தது. அதைக்குறித்து ஏதோ ஒரு காரியம் உண்டு, இயேசு வரும்போது, அது எப்பொழுதுமே ஒரு கலக்கமாயிருக்கிறது. முழு நகரமும் கலக்கமடைந்தது. அவர்களால்—அவர்களால் அதை மறைக்க முடியவில்லை. 60 இந்தக் கலக்கத்திற்காக அந்த நாளின் பிரசங்கிமார்கள் கணக்கொப்புவிக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அது பஸ்கா பண்டிகையிலே அவ்வாறிருந்தது. மேலும் அவர்கள், “இவர் யார்?” என்று கூச்சலிட்டனர். எதிர்பார்ப்போடிருந்தபோது, கர்த்தராகிய இயேசுவின் வருகை எருசலேமில் எதிர்பார்ப்புகளால் நிறைந்திருந்தபோது, அது என்ன சம்பவிக்க போவதாக இருந்தது என்பதை போதகர்கள் அறிந்திருந்திருக்க வேண்டும் என்பது போன்று காணப்பட்டது. அது பிரதான ஆசாரியன் அதை அறிந்திருந்திருக்க வேண்டும் என்பது போன்று காணப்பட்டது. அது மற்ற எல்லா ஆசாரியர்களும் அதை அறிந்திருக்க வேண்டும் என்பது போன்று காணப்பட்டது. 61 இன்றும், அது எதிலுமே மாறியிருக்கவில்லை, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக இருக்கிறார். மேலும் பரிசுத்த ஆவியானவர் பூமி முழுவதும் அசைவாடத் தொடங்கியதும், எழுப்புதல் அக்கினிகள், எங்கும் பரவின, மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டுள்ளன, சுகமளித்தல்களும் நடந்துள்ளன, தீர்க்கதரிசனங்களும் புறப்பட்டு சென்றுள்ளன. அனைத்து அப்போஸ்தல ஆசீர்வாதங்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் சபைக்கு திரும்பி வந்துள்ளன. எனவே, அது அப்பொழுது இருந்தது போலவே, அது இப்பொழுதும் அவ்வண்ணமாகவே உள்ளது, அவிசுவாசியின் ஆவி இன்னமும், “இவர் யார்?” என்று கூக்குரலிடுகிறது. 62 அவர் ஒரு நல்ல மனிதர் என்று கூறும்படியாகவே, அவர்களில் சிலர் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தனர். அவர்களில் சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றனர். 63 அதைத்தான் அவர்கள் இன்றைக்கும் கூறுகின்றனர். அவர்கள் அவரை ஒரு நெப்போலியனாக, ஒரு போர் வீரன் என்ற ஸ்தானத்தில் வைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் அவரை ஒரு—ஒரு ஜார்ஜ் வாஷிங்டனாக, ஒரு உண்மையுள்ள மனிதன் என்ற ஸ்தானத்தில் வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் அதற்கும் மேலானவராக இருந்தார். 64 வேத வாசிப்பில் நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள், “இது கலிலேயாவிலிருந்து வருகிற ஒரு தீர்க்கதரிசி” என்றனர். 65 கர்த்தருடைய இந்த மகத்தான அசைவை அவர்கள் காணும்போது, இன்றைக்கு அவர்கள் அதே காரியத்தையே கூற முயற்சிக்கின்றனர்; சுகவீனம் மற்றும் அவதியற்றோரின், சுகமளித்தல், திரும்ப அளிக்கப்படும்போது; ஜனங்களின் நினைவுகளை பகுத்தறிய, தம்முடைய சபையில் தம்முடைய ஆவியை அவர் பயன்படுத்துவதை காணும்போது; அவர் என்ன சம்பவிக்கும் என்று கூறினது நிறைவேறும்படியாய், அவர் பூமியின் மேல் இருந்தபோது செய்ததையே அவர் செய்ய காணும்போது; நிச்சயமாகவே, சபைகளும் ஜனங்களும் இதை, “இவர் யார்?” என்றே கேட்கின்றனர். 66 இயேசு யாராக இருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை, ஏனென்றால் அவர்கள் யாராலும் அவர்களுடைய வேதபாட பள்ளிகளின் மூலமாக, அவரை அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. “அவர் எந்த வேதபாட கருத்தரங்கில் இருந்து வெளியே வந்தார்? அவர் எந்த வேத சாஸ்திர பள்ளியிலிருந்து வந்தார்?” 67 அது இன்றைக்கும் அவ்வண்ணமாகவே உள்ளது. பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட அநேக ஜனங்கள் எந்த வேதபாட கருத்தரங்கிலிருந்தும் வெளிவரவில்லை. அவர்கள் தேவனுடைய சொந்த தெரிந்துகொள்ளுதலின் உற்பத்தியாயிருக்கிறார்கள். ஆனால் வேதாகமத்தில் வாக்களிக்கப்பட்டிருந்த அடையாளங்களும், அற்புதங்களும், மற்றும் அதிசயங்களும், இந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு மத்தியில் அசைவாடும்போது உடன் சென்றன. 68 அவர்களோ இன்றைக்கு, “அவர்கள் எந்த பள்ளியில் இருந்து வந்தனர்?” என்று கேட்கின்றனர். ஒரு எழுப்புதலை நடத்த, ஒரு நகரத்திற்குள் நீங்கள் பிரவேசித்த உடனே, “நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்?” என்று கேட்கின்றனர். 69 லூயிவில்லிலுள்ள அயர்லாந்து சபையிலிருந்து வந்திருந்த ரோமன் கத்தோலிக்க குருவானவரோடு வெள்ளிக்கிழமை பிற்பகல் எனக்கு ஒரு நேர்முக பேட்டி இருந்தது. நான் அவரிடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனே, ஒரு அருமையான அறிவார்ந்த மனிதன், அப்பொழுது அவர், “திரு. பிரான்ஹாம், நீங்கள் எந்த ஸ்தாபனத்தோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “நான் எதனோடும் இல்லை” என்றேன். மேலும் அவர், அப்பொழுது, “நீர் நியமிக்கப்பட்டீரா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம் ஐயா” என்றேன். அப்பொழுது அவர், “உங்களை நியமித்தது யார்?” என்று கேட்டார். 70 அதற்கு நானோ, “சுவிசேஷத்தை பிரசங்கிக்க கர்த்தராகிய இயேசு எனக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, ஒரு கட்டளையையும் எனக்கு கொடுத்தார்” என்றேன். பாருங்கள், அந்த நியமனப் பதவியே நமக்குத் தேவை. 71 இயேசுவானவர் ஒருபோதும் தம்முடைய சீஷர்களிடத்தில், “போய்…” என்று கூறவேயில்லை. நானும் அந்தக் காரியங்களை விமர்சித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்கள் அவர்களுடைய நாளில் வாழ்ந்துள்ளனர். அவர், “ஒரு ஊழியக்காரனாயிருக்க, போய், இத்தனை-வருடங்கள் ஆய்ந்து படியுங்கள்” என்று கூறவில்லை. 72 அவர், “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்” என்றார். தங்களுடைய சொந்தப் பெயரை கையொப்பமிட முடியாத மனிதர்களிடத்தில் அவர் அதைக் கூறினார். “இதற்குப் பிறகு, பரிசுத்த ஆவி உங்கள் மீது வரும்போது, அப்போது நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்.” அதுதான் நியமனம். 73 இயேசு எந்த பள்ளிக்கும் சென்றதாக, அல்லது எந்த வேதாகம கருத்தரங்குகளுக்கும் சென்று பட்டம் பெற்றதாக நம்மிடத்தில் சான்று ஏதுமில்லை. அதே சமயத்தில், மத சம்பந்தமான காரணங்களுக்காக, உலகத்தில் வேறெந்த—வேறெந்த காரியத்திற்கும் எப்போதும் இருந்து வந்ததை காட்டிலும் அவருடைய பெயரில் அதிகமான கருத்தரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர் பள்ளிக்கு சென்றதைக் குறித்து நம்மிடத்தில் ஒருபோதும் எந்த—எந்த சான்றும் இருந்ததில்லை. ஆனால், அதே சமயத்தில், வானத்துக்குக் கீழே மற்ற எந்த விதமான ஒரு பெயரையுடைய பள்ளிகளைக் காட்டிலும் அவருடைய பெயரில் அதிகமான பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அவர் ஒரு புத்தகத்தை எழுதினதைக் குறித்து நாம் ஒருபோதும் அறிந்திருந்ததில்லை. அதே சமயத்தில், எழுதப்பட்டுள்ள எல்லா இலக்கியங்களைக் காட்டிலும் அவரைக் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களே அதிகமாக இருந்து வருகின்றன. மேலும், இன்றைக்கு, எல்லா இலக்கியங்களுக்கு மத்தியிலும், உலகெங்கிலும் அவருடைய வேதாகமமே மிகப் பிரபலமான புத்தகமாக இருக்கிறது. 74 ஆனால், நீங்கள் பாருங்கள், வருகைதந்த நாளில், அவர்கள், “இவர் யார்?” என்று கூக்குரலிட்டனர். 75 பாருங்கள், ஒன்றுமே இல்லை என்று தென்படுகிற ஏதோ ஒரு காரியத்தை தேவன் எடுத்து, அதிலிருந்து ஒரு காரியத்தை உருவாக்குகிறார். அதுவே அவரை தேவனாக்குகிறது. 76 அந்த வாசலுக்குள்ளே அவர் சவாரி செய்து வருவதை, அவர்கள் கண்டபோது, அவர்களில் சிலர், “அவர் ஒரு மகத்தான மனிதன்” என்றனர். 77 அவர்கள் இன்றைக்கும் அதையே கூறுகின்றனர். இயேசு ஒரு நல்ல மனிதனாய் இருந்தார் என்றும், இயேசு ஒரு மகத்தான மனிதனாய் இருந்தார் என்றும், இன்றைக்கும் போதிக்கிற வேத சாஸ்திர பள்ளிகள் உண்டு. அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்று கூட அவர்களில் சிலர் கூறுகின்றனர். இப்பொழுது, அவர் ஒரு தீர்க்கதரிசியாக மாத்திரம் இருந்திருந்தால், அல்லது ஒரு நல்ல மனிதனாய் மாத்திரம் இருந்திருந்தால், நாம் நம்முடைய பாவங்களில் இருக்கிறோம். அவர் ஒரு தீர்க்கதரிசியை காட்டிலும் மேலானவராக இருந்தார். அவர் ஒரு நல்ல மனிதனை காட்டிலும் மேலானவராக இருந்தார். அதேசமயத்தில், அவர் ஒரு நல்ல மனிதனாக இருந்தார். அதேசமயத்தில் அவர் தேவனும்-தீர்க்கதரிசியுமாயிருந்தார். ஆனால் அவர் அதைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். பாவத்தை எடுத்துப்போட, அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாய் இருந்தார். 78 மேலும் அவர் சவாரி செய்து, உள்ளே வரும்போது, அநேக ஜனங்கள், “அவர் ஒரு சுகமளிப்பவர். ஓ, அவர் குருடரின் கண்களைத் திறந்ததை நாங்கள் கண்டோம். அவர் முடமான மனிதனை நடக்க வைத்ததை நாங்கள் கண்டோம். அவர் ஜெபம் எறெடுக்க, ஜுரம் குழந்தையை விட்டுச் சென்றதை நாங்கள் கண்டோம்” என்றனர். ஆனால், அப்பொழுது, அந்த மாதிரியானவர்கள் அப்பங்களுக்காகவும் மீன்களுக்காகவுமே அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். 79 அந்த விதமாகவே இன்றைக்கு அநேக, கூட்டங்கள் இருக்கின்றன. ஒரு சுகமளிப்பவர் இருந்தால், ஏன் அவர்கள்—அவர்கள் அவரை பின்பற்றுகிறார்கள், அவர்—அவர் ஒரு சோலையாய் இருக்கிறார். அவர்கள் சுகவீனமாக இருந்தால், அவர்கள் ஓடி, “ஓ, கர்த்தராகிய இயேசு என்னை குணமாக்கும்படி, நீங்கள் தயவு கூர்ந்து எனக்காக ஜெபிப்பீர்களா?” என்று கேட்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவுடன், அல்லது நோய்ப் படுக்கையிலிருந்து வெளியே வந்தவுடன், அவர்கள் உலகத்திற்கு திரும்பி சென்றுவிடுகின்றனர், வேதம் கூறியுள்ளதுபோல, ஒரு நாய் தான் கக்கினதை தின்னவும், அல்லது ஒரு கழுவப்பட்ட பன்றி சேற்றில் பரளுவது போலவும் உள்ளது. அவரிடத்திலிருந்து அவர்கள் என்ன நன்மையைப் பெற முடியும் என்பதற்காகவே அவரைப் பின்தொடர்கிறார்கள். அவர்கள் அவரை ஒரு—ஒரு மரபுச் சின்ன கம்பமாக, அல்லது—அல்லது அவரிடத்திலிருந்து தரக்கூடிய அந்த—அந்த ஏதோ ஒன்றிற்காக அவரை உபயோகிக்கின்றனர், மேலும் அவரை சேவிக்க எதிர்பார்ப்பதில்லை. அந்தக் கூட்டம் இன்றைக்கும் இன்னமும் அவ்வாறே தொடர்கிறது. 80 ஒன்பது குஷ்டரோகிகள் குணமடைந்தனர், ஒருவன் திரும்பி வந்து அவருக்கு துதி செலுத்தினான். இல்லை அவர்கள் பத்து பேர் தானே? அவர்கள், அவர்களில் ஒருவன், திரும்பி வந்து அவருக்கு துதி செலுத்தினான், மீதமுள்ளவர்கள் நன்றியற்றவர்களாய் சென்றுவிட்டனர். 81 அமெரிக்காவில் உள்ள ஜனங்கள், தேவனுடைய வல்லமையினால் சுகமாக்கப்பட்டு, தேவனிடத்தில் தங்களுடைய இருதயங்களை அளிப்பார்களேயானால், ஒவ்வொரு மதுபானக் கடையையும் மூடும் அளவிற்கு இந்த தேசத்தில் எழுப்புதல் உண்டாகும், அதாவது…போதைப் பொருட் கடைகள் மற்றும் மதுபான கடைகள் காட்சியில் இல்லாமற் போகும். சபைகள் நிரம்பி வழியும். திரையரங்குகள் ஞாயிறு இரவு காலியாக இருக்கும். இந்த தேசத்தினூடாக, ஒரு எழுப்புதல் உண்டாகும். ஆனால் அது சம்பவிப்பதை, தேவன் செய்கிற அந்த காரியங்களைக் காணும்போது, அவர்கள், “இவர் யார்? வருகிற இவர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர் யார்? எந்த அதிகாரத்தினால் செய்யப்பட்டது?” என்று இன்னும் கூச்சலிடுகிறார்கள். 82 தென்னாப்பிரிக்காவில் உள்ள, ஜோகன்ஸ்பர்க்கில் நடந்ததை ஒருபோதும் மறக்க முடியாது. நான் ஒரு ஆகாய விமானத்தில், சுமார் முப்பது நிமிடங்களுக்கு முன்பாகவே, நான் அங்கு சென்றடைந்தேன். நான் மூன்று பகல்களும் மற்றும் இரவுகளாய் ஆகாய விமானத்திலேயே இருந்தபடியால், என்னால் நிற்க முடியாதபடி மிகவும் களைப்புற்றிருந்தேன். அவர்களோ—அவர்களும் ஐம்பது அல்லது அறுபதாயிரம் ஜனங்கள் கூடியிருந்த திறந்தவெளி மைதானத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். மேடைக்கு வந்தவுடனே, பரிசுத்த ஆவியானவர்…அந்த இடத்திற்கு குறுக்கே ஒரு—ஒரு பேருந்து வருவதை நான் கண்டேன். அதன்மேல் “டர்பன்” என்ற ஒரு அடையாளம் இருந்தது. ஒரு வாலிபன் தன்னுடைய தாய் தகப்பனிடம் வம்பு செய்து நழுவி விழுவதை நான் கண்டேன், ஒரு கால் மற்ற காலை விட ஆறு அல்லது எட்டு அங்குலங்கள் குறைந்திருந்தன. அவன் ஒரு வெள்ளை சட்டையை அணிந்து, அவனுடைய கால் சட்டை தோள்பட்டையிலிருந்து நெகிழும் தன்மை கொண்ட நாடாக்களால் பிடித்துக் கொள்ளப்பட்டிருந்தது. நான் அந்த வாலிபனை கவனித்தேன். நான் மீண்டும் திரும்பி பார்த்தேன். தரிசனம் போய்விட்டது. அதன்பின்னர், சற்று நேரத்தில், கூட்டத்தில் பின்னாலிருந்த, ஒரு வாலிப மனிதன் மீது அந்த ஒளி தொங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது நான், “நான் அவனை எங்கோ பார்த்தேன்” என்று எண்ணிக்கொண்டேன். நான் அவனை கவனித்தேன், மேலும் அந்த ஒளி தொடர்ந்து அவன் மேல் ஒரு சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தது. அடுத்து கூறப்போகும் வார்த்தைகளை மொழிபெயர்ப்பாளர் புரிந்துகொள்ளும்படியாக நான் காத்துக்கொண்டிருந்தேன். அதன்பின்னர் நான் அதே வாலிபன் தன்னுடைய ஊன்று கோல்களை கீழே வீசிவிட்டு, எழும்பி நின்றதையும், மேலும் ஆறு அங்குலங்கள் குறைவான அவனுடைய கால் மற்றொன்றை போன்றே இயல்பானதையும் நான் கண்டேன். 83 அப்பொழுது நான் இன்றிரவு, மகிமையில் இருக்கிற, திரு. ஏ.ஜே. ஸ்கோமேனிடத்தில் கூறினேன். நான், “திரு. ஸ்கோமேன், என்னுடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டுங்கள். அது ஒரு தரிசனம்” என்றேன். அதற்கு அவர், “சரி” என்றார். 84 அப்பொழுது நான், “வெள்ளை சட்டை, மற்றும் நெகிழும் தன்மை நாடாக்களைக் கொண்ட கால்சட்டையோடு அங்கே பின்னால் அமர்ந்திருக்கிற அந்த வாலிபன், சுமார் ஆயிரத்து ஐநூறு மைல்கள் தொலைவிலுள்ள தேசத்தில், டர்பன் என்று அழைக்கப்படுகின்ற ஒரு நகரத்திலிருந்து, ஒரு பேருந்தில், அவன் வந்தான். அவன் இங்கு வருவதற்கு, தன்னுடைய தாய் தகப்பனிடமிருந்து நழுவி வர வேண்டியதாயிருந்தது. ஆனால் அவன் கர்த்தராகிய இயேசுவின் பேரில் விசுவாசம் வைத்திருந்தான், அவனுடைய ஒரு கால் மற்றொன்றைவிட ஆறு அங்குலங்கள் குறைவாயிருந்தது” என்றேன். 85 அந்த வாலிபன் குதித்தெழுந்தான். அவன் அங்கு நின்று, தன்னுடைய ஊன்றுகோல்களால் நிற்க முயன்று கொண்டிருந்தான். அப்பொழுது நான், “வாலிபனே, கர்த்தராகிய இயேசு உன்னை சுகமாக்கிவிட்டார்” என்றேன். உடனடியாக அவனுடைய கால், இயல்பாகும்படி, மற்றொன்றை போன்று ஆறு அங்குலங்கள் நீண்டது. அவர்கள் அந்த வாலிபனை மேடைக்கு கொண்டு வந்தனர், மருத்துவர்கள் அவனை அங்கேயே பரிசோதித்தனர். நீங்கள் அவனுடைய புகைப்படத்தை என்னுடைய புத்தகத்தில் பார்க்கிறீர்கள். 86 நான் அங்கே அப்படியே ஒரு சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன், அப்பொழுது ஒரு சிறிய பச்சை நிற கார் சாலையில் வந்து கொண்டிருந்ததையும், அது நழுவி சென்றதையும், நான் கண்டேன். அது சுற்றித் திரும்பி, பின்னோக்கினவாறு, ஒரு மரத்தில் மோதியது. ஒரு வாலிப, இளம் பொன்னிற தலையுடைய பெண்ணுக்கு…முதுகு உடைந்திருந்தது. மேலும் நான், “ஒரு சிறிய பச்சை நிற கார், நழுவி ஒரு மரத்தில் இடிப்பதை நான் காண்கிறேன், மற்றும் ஒரு வாலிப இளம் பொன்னிற தலையையுடைய சுமார் பதினெட்டு வயதுள்ள ஒரு பெண்ணின் முதுகு உடைந்திருக்கிறது. அவள் மிக ஆபத்தான ஒரு நிலையில் இருக்கிறாள்” என்றேன். அப்பொழுது எவருமே பதில் அளிக்கவில்லை. மேலும் என்னால் அந்த பரந்த, பெரிய ஜனக் கூட்டத்தில் அவளை எங்கும் காண முடியவில்லை. மேலும் நான் அங்கேயே ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்றேன். நான், “புரிகிறது. அதை…சந்தேகப்பட வேண்டாம். அது உயிர்த்தெழுதலின் வல்லமையிலுள்ள கர்த்தராகிய இயேசு. அவர் தம்முடைய ஊழியத்தை தொடர்ந்து நடத்த பரிசுத்த ஆவியை அனுப்பினார்” என்றேன். மேலும் அந்த தரிசனம் மீண்டும் நிகழ்வதை நான் கண்டேன். என்னால் அந்த வாலிப ஸ்திரீயைக் காண முடியவில்லை. 87 இங்கே நின்ற அந்த ஒளியை, நீங்கள் அந்த புகைப்படத்தில் காண்பது போல, அப்பொழுது, எனக்கு முன்பாக சரியாக அந்த ஒளி நின்றது. அது இங்கே நின்றது. நான் அங்கே நடந்து சென்றேன், அப்பொழுது அவள் அங்கே மேடைக்கு கீழே, படுத்திருந்தாள். அப்பொழுது நான், “வாலிப பெண்மணியே, கர்த்தராகிய இயேசு உன்னை குணப்படுத்தியிருக்கிறார்” என்றேன். அவள் அழத் துவங்கினாள். 88 அவளுடைய தாயார், “ஓ, இல்லை! அவளை எழுந்திருக்க சொல்லாதீர்!” என்றாள். மேலும், “அவள் அசைந்தால், அவள் மரித்து விடுவாள்” என்றாள். 89 அந்த வாலிப பெண்மணியோ அவளுடைய காலூன்றி குதித்தெழுந்து, கூச்சலிட்டு, தேவனைத் துதித்தாள். அந்தத் தாயோ அந்தப் பெண் படுத்துக்கொண்டிருந்த கட்டிலில் மயக்கமுற்று விழுந்தாள். அது என்னவாயிருக்கிறது? 90 சரியாக கிட்டதட்ட அந்த நேரத்தில், குற்றம் கண்டுபிடிக்கிற ஒரு மனிதன் அங்கே பின்னாலிருந்து எழுந்து, ஒரு காலை ஒரு இருக்கையின் மீதும், மற்றொரு காலை மற்றொரு இருக்கையின் மீதும் வைத்தவனாய் எழுந்து நின்று, “அமெரிக்கனே, உன்னைத்தான்! எந்த நாமத்தில் நீ இதை செய்கிறாய் என்று நீ எனக்கு சொல்லும்படி நான் உனக்கு சவாலிடுகிறேன்! நீர் எந்த ஸ்தாபன சபையை சேர்ந்தவர்?” என்று கேட்டான். பார்த்தீர்களா? 91 இது அதே விதமாக உள்ளது. அவர்கள் புரிந்து கொள்கிறதில்லை. அவர்கள் இந்த காரியங்களுக்காக எதிர்நோக்கி கொண்டிருக்கவில்லை. சபைகள் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கி கொண்டிருக்கவில்லை. அவருடைய வருகையை உறுதிப்படுத்தவும், அதை நிறைவேற்றவும் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். மிக அதிகமான… ஒவ்வொருவனும் தன்னுடைய சொந்த வழியைத் தெரிந்துகொள்ள விரும்புகிறான். அந்த விதமாகவே அது அங்கே இருந்தது. ஒவ்வொரு குழுவும் தங்களுடைய சொந்த கருத்தை உடையவர்களாய் இருந்தனர். 92 ஆனால் இன்றிரவு கேள்வி அதுவல்ல. நான் பேசிக்கொண்டிருப்பது அதைக் குறித்து அல்ல. நான் உங்களிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிற கேள்வியோ, நீங்கள் இதை என்னவென்று நினைக்கிறீர்கள்? அது உங்களைப் பற்றியது. தேசங்களின் மேலும் கீழும் சென்று கொண்டிருக்கிற இவர் யார்? மனிதர்கள் அல்ல. மனிதர்கள் அந்த காரியங்களை செய்ய முடியாது. மரித்துக்கொண்டிருக்கிற ஆண்களும் பெண்களும் இங்கே கொண்டுவரப்படும்போது, கூட்டத்தில் வெவ்வேறு இடங்களில், “இங்கே, இங்கே அமர்ந்துள்ளபோது” அந்தக் கூட்டத்தில் உள்ள ஜனங்களிடத்தில் பேசி கூறிக் கொண்டிருக்கிற, இது யார்? இது யார்? 93 இந்தக் காலை அந்த ஞானஸ்நான தொட்டிக்குள் நடந்து வந்த அந்த வாலிப ஸ்தீரி, அதாவது மூன்று வாரங்களுக்கு முன்பு, முற்றின பல புற்றுநோய்களால் மரித்துக் கொண்டிருந்தாள், திருமதி. பைட்டி, இங்கே மேப்பிள் தெருவில் வசிக்கிறாள். மேலும் நான் அவளோடிருந்த மூன்று மருத்துவர்களிடத்தில் கேட்டேன். அவள் உயிர் வாழ்வதற்கு எந்த வாய்ப்பினையும் பெற்றிருக்கவில்லை, நான்கு அல்லது ஐந்து பிள்ளைகளோடிருந்த அவள், என்னுடைய தாயார் அவர்களை கவனித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்றாள். தாயாரோ, “பில், அவள் வீட்டுக்கு மீண்டும் ஒருபோதும் வரமாட்டாள்” என்றாள். 94 நான் அவளிருந்த இடத்திற்குச் சென்றேன், கர்த்தராகிய இயேசு, “கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் சபைக்கு சென்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, தேவனை சேவிப்பதாக வாக்களித்தால் அவள் குணமடைந்து, வீடு செல்வாள்” என்று உரைத்தார். அப்பொழுது நான் அவளிடத்தில், “பெண்மணியே, நீங்கள் இதை செய்வீர்களா?” என்று கேட்டேன். 95 அதற்கு அவள், “நீர் சொல்லுகிற எல்லாவற்றையும், நான் செய்வேன்” என்றாள். உடனடியாக வலிகள் போய்விட்டன. மூன்று நாட்கள் கழித்து, அவள் வீட்டில் இருந்தாள், மருத்துவர்களால் அந்த புற்றுநோயின் ஒரு தடையத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 96 கர்த்தருடைய நாமத்தில் வருகிற இவர் யார்? இது யார்? இது தேவனுடைய பரிசுத்த ஆவி. அதைக் குறித்து உங்களுடைய கருத்து என்ன? உங்களுடைய போதகரை அறிந்துள்ள, உங்களுடைய கருத்து என்ன? இங்கே இந்த இருக்கைகளில், பட்டணத்திற்கு வெளியிலிருந்து வந்து அமர்ந்துள்ள ஜனங்கள், காக்காய் வலிப்போடு அமரந்து, அமரந்து…இங்கே ஒரு மனிதன், இங்கே எங்கோ, சரியாக இங்கே, மெனோனைட் சகோதரன், காக்காய் வலிப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரை ஒருபோதும் கண்டதோ அல்லது அறிந்ததுமில்லை, அவரைக் குறித்து ஒன்றுமே தெரியாது. திடீரென்று, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, அல்லது ஏதோ, ஆம், இரண்டு வருடங்களுக்கு முன்பு என்றே, நான் யூகிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் அவரை அழைத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறினார். அது முதற்கொண்டு அவருக்கு எந்த ஒரு காக்காய் வலிப்பு மயக்கமும் வந்ததே இல்லை. இது யார்? இது யார்? 97 கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்த ஸ்திரீ இங்கே அமர்ந்து கொண்டிருந்தாள், நான் இல்லினாய்ஸில் எங்கிருந்தோ வந்து, கடந்த முறை நான் இங்கிருந்தேன். அடுத்த நாள்…அவளுடைய சரீரத்தில் ஒரு பெரிய கட்டியோடு இருந்தாள், அது கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தது. திங்கட்கிழமை, அறுவைசிகிச்சை செய்யப்படுவதற்காக, இல்லினாய்ஸின் மருத்துவ விஞ்ஞானத்தில் மிகச்சிறந்த விளங்கின சிலர் அவளை ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தனர். அவள் மிகுந்த சிரமத்தோடு சென்றாள். என் வாழ்நாள் முழுவதும் நான் அவளைக் கண்டதும் இல்லை அல்லது அவளைக் குறித்து கேள்விப்பட்டதும் இல்லை. திடீரென்று, பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிட்டு, அவள் யாராய் இருந்தாள் என்றும், அவள் எங்கிருந்து வருகிறாள் என்றும், அடுத்த நாள் அவள் அறுவை சிகிச்சை செய்யப்படப் போவதாக இருந்தாள் என்றும் அவளிடத்தில் கூறினார். அதைப் பார்க்க, அப்பொழுது எத்தனை பேர் இங்கே இருந்தீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] மேலும் அந்த செய்தி திரும்பி வந்ததைக் கவனியுங்கள். அடுத்த நாள், அவள் மருத்துவரிடம் சென்றபோது அவள் ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அதனுடைய ஒரு தடையத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 98 யார் இவர்? ஓ, தேவன் இரக்கமாயிருப்பாராக! இதை செய்து கொண்டிருக்கிற இவர் யார்? அது உங்களுடைய போதகர் என்று உங்களால் தைரியமாய்க் கூற முடியுமா? முடியாதே. மனிதர்கள் அதற்குள்ளாக எந்த காரியத்தையாவது செய்ய வேண்டியதாயிருந்து என்று உங்களால் தைரியமாய்க் கூற முடியுமா? முடியாதே. அது பரிசுத்த ஆவியாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மேலிருந்த ஆவியாய் இருக்கிறது. அவருடைய வருகை அவரை அவருடைய சபையோடு இணைக்கும்படியும், அவருடைய மகத்தான பரிசுத்த வெளிச்சத்தைப் பரப்பவும், மீட்கவும், ஒரு ஜீவனுள்ள தேவனுடைய சபையை, ஐக்கியத்திற்குள்ளாக கொண்டு வரவும், மிக நெருக்கமாக இருக்கின்றது, ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்படுதல் சமீபித்திருக்கிறது. ஆமென்! 99 இது யார்? என்னால் உங்களுடைய கேள்விக்கு பதிலளிக்க முடியாது. என்னால் உங்களுக்காக பதிலளிக்க முடியாது. ஆனால் என்னால் எனக்கே பதிலளித்து கொள்ள முடியும். இந்த புனித மேஜையினன்டை, இன்றிரவு, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் கொள்ளப்பட்ட, இக்கூட்டத்தினரின் செவிகளில், நான் என்னுடைய இருதயத்தின் அடித்தளத்திலிருந்து இதைக் கூறுகிறேன். நான் உங்களில் ஒருவன் என்ற காரணத்தினால் அல்ல, நான் வித்தியாசமான யாரோ ஒருவராக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் இரத்தத்தினாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டவர்களில் ஒருவன் என்பதனாலேயாம். இன்றிரவு, அதே வெளிச்சம் இந்த சபையில் தொங்குகிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அதே ஒருவர், அதே சுபாவத்தின் மூலம், அது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் உள்ள, இயேசு கிறிஸ்து என்பதை காண்பிக்கிறார். 100 வேதவாக்கியத்தை அறிந்துள்ள எவரும், இயேசு, “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், தேவனிடத்திற்கு புறப்பட்டுச் செல்லுகிறேன்” என்று கூறினார் என்பதை அறிந்துள்ளனர். அவர் மாம்சமாக்கப்படுவதற்கு முன்பு, வனாந்தரத்தில் மோசேயோடிருந்தபோது, அவர் அக்கினி ஸ்தம்பமாயிருந்தார். மோசே அவரைக் காண வாஞ்சித்தபோது, அவர் தம்முடைய பின்பாகத்தைக் அவனுக்குக் காண்பித்து கடந்து போனார். அப்பொழுது மோசே, “அது ஒரு மனிதனைப்போலக் காணப்படுகிறது” என்றான். அவர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர் மீட்டுக்கொண்டுள்ள மனிதர்களினூடாக, இன்றைக்கு, அவர் செய்த அதே காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் வந்தபோது அவருடைய புகைப்படம் எடுக்கப்பட்டது. அது என்ன? 101 அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழதலுக்குப் பிறகு, பவுல் தமஸ்குவுக்குப் போகும் தன்னுடைய வழியில் இருந்தபோது, ஒரு நாள், ஒரு மகத்தான வெளிச்சம் அவனைக் கீழே வீழ்த்தியது. அவனைச் சுற்றிலும் இருந்த அந்த மனிதர்கள் அந்த வெளிச்சத்தைக் காணவில்லை. ஆனால் அது அவனை குருடாக்கும் அளவிற்கு, அவனைக் கீழே வீழ்த்தியது. அவனுடைய எஞ்சியுள்ள காலமெல்லாம் அவனுக்கு அவனுடைய கண்களினால் கோளாறு உண்டாயிருந்தது. அவன் ஒரு முறை, “எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய, மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு,” அவனுடைய மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது அவனைக் குட்டும் சாத்தானுடைய தூதனாய் இருக்கிறது என்று கூறினான். ஏனென்றால் அது மிகுதியான வெளிப்பாடாய் இருந்தது. 102 பவுல் மதவெறியர்கள் என்றழைக்கப்பட்ட ஜனங்களை, ஒரு மீண்டும் பிறந்த குழுவை, அதிக சத்தத்தை உண்டுபண்ணி கொண்டிருந்த ஜனங்களை; துன்பப்படுத்த தன்னுடைய பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, கீழே வீழ்த்தப்பட்டான். அவர்களை கைது செய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்காக, தன்னுடைய சட்டைப்பையில் நிருபங்களோடு, அவர்களை துன்புறுத்த பவுல் தன்னுடைய பாதையில் சென்று கொண்டிருந்தான். சுமார் மத்தியான வேளையிலே, ஒரு ஒளி கீழே வந்து அவனை தரையில் குப்புற விழத் தள்ளிற்று, அவன் தரையிலே விழுந்தான். அந்த ஒளியிலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று கூறிற்று. 103 சவுல் திரும்பி, தன்னுடைய குருடாக்கப்பட்ட நிலையில், மேல்நோக்கிப் பார்த்தான். அவனால் அந்த மகத்தான, மகிமையான ஒளியைக் காண முடிந்தது. அப்பொழுது அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். 104 அப்பொழுது அவர், “நான் இயேசு. நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்; நான் தேவனிடத்திற்குச் சென்றேன். நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்; நான் தேவன் இடத்திற்குத் திரும்புகிறேன்” என்றார். மேலும் அவர், “முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். 105 அந்தப் புனித மணலின் மேல் ஒரு வெளிப்பாடு, அந்த இடத்தில் ஒரு முறையிருந்த, மனிதன் அதே விதமாக ஒருபோதும் இருக்க முடியாது. ஒரு மனிதன், அவன் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்ளும் முன்பே, அவன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் முன்பே, அவன் முதலில் அந்த வனாந்திரத்தின் பின்பக்க அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும், அங்கே அவன் தேவனை முகமுகமாக, சந்திக்கிறான். 106 ஏனென்றால், இன்றைக்கு, நீங்கள் எந்த விதமான பதிலையும் பெற முடியும். கர்த்தர் செய்வதாக சொன்னதை அவர் சரியாக செய்வதை உங்களால் காண முடியும், மேலும் புத்திசாலியான வேத பண்டிதர்கள் இதை விளக்குவார்கள். அவர்கள், “அது மற்றொரு நாளுக்கானதாயிருந்தது. அது இதற்கானதாய் இருந்தது. இல்லை, அது மற்றொரு காலத்துக்கானதாயிருக்கிறது. அல்லது, அது தவறாயிருக்கிறது” என்று கூறுவார்கள். அவர்கள், “அவர் பெயல்செபூல், பிசாசு. அவர் ஒரு குறி சொல்பவர்” என்று இயேசுவைக் குறித்து கூறியது போலவே. மேலும் அந்த காரியங்கள் எல்லாவற்றுக்கும், அவர்களிடம் பதில் இருக்கிறது. 107 ஆனால் ஒரு மனிதன் கிறிஸ்துவோடு தொடர்புகொள்ள எப்போதாவது வந்திருந்து, பவுல் கண்டதைப் போல, அவரைக் கண்டிருக்கும்போது, அல்லது அவரிடத்தில் அனுபவங்கொண்டிருக்கும்போது, அந்த ஒரு மனிதனுடைய அனுபவத்தை விளக்கிக் கூறக் கூடிய போதுமான வேத பண்டிதர்கள் இந்த உலகத்தில் இல்லை. 108 அந்த காரணத்தினால்தான், இன்றைக்கு, அவர்கள் அனுபவத்தை பெற்றிருக்கவில்லை. அந்த காரணத்தினால்தான் அவர்களால் கூற முடியவில்லை…அவர்கள் எல்லோருமே, “இவர் யார்? இது என்ன? இது எங்கிருந்து வருகிறது?” என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பதிலைப் பெற்றிருக்கவில்லை. ஏன்? ஏனென்றால், அவர்கள் அறிந்துள்ளதெல்லாம் ஏதோ ஒரு சபை உருவாக்கியிருக்கிற ஒரு வேத சாஸ்திரமேயாகும். “வேத சாஸ்திரத்தை அறிந்துகொள்வது” ஜீவனல்ல. “வேதாகமத்தை அறிந்துகொள்வதும்” ஜீவன் அல்ல. 109 ஆனால் “அவரை அறிந்துகொள்வதே” ஜீவனாய் இருக்கிறது. அவருடைய பிரசன்னத்தில் உங்களை நிரப்பியிருக்கின்ற ஒருவராயிருக்கிறபடியால், உங்களுடைய சொந்த இரட்சகராக “அவரை அறிந்துகொள்வதே.” அது சம்பவித்தபோது, நீங்கள் அங்கே இருந்தீர்கள். அதிலிருந்து உங்களை எவராலும் விலக்கி எடுக்க முடியாது. உங்களுக்காக எவரும் அதை விளக்க முடியாது. அந்த அனுபவம் உங்களுக்கு சம்பவிக்கிறபோது, அவர் யாராக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். எனக்கு, அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாத இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். 110 இந்த அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிற இவர் யார்? இந்த மகத்தான கிரியைகளை செய்து கொண்டிருக்கிற இது யார்? இது பிரசங்கியா? இது ஓரல் ராபர்ட்ஸா? இது பில்லி கிரஹாமா? இது ஜேக் ஷூலரா? வில்லியம் பிரான்ஹாமா? அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு இதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் கருவிகளாயிருக்கிறார்கள். 111 அது பரிசுத்த ஆவியானவர், ஒரு ஜனத்தை ஆயத்தப்படுத்தும்படி, அடையாளங்கள், அற்புதங்கள், அதிசயங்களோடு கூடிய சுவிசேஷதோடு வருகிறதாயுள்ளது. அவர் வருவதை எதிர்நோக்கியிருக்கும் விசுவாசிகளோடு கூடிய, எதிர்பார்ப்புகளால் நிறைந்துள்ளது. 112 மற்றவர்களோ, “ஏன் இந்த எழுப்புதல்கள்? நாம் ஏன் இதைப் பெற்றிருக்கிறோம்? நாம் ஒரு சபையில் சேர்ந்துகொள்வோம்” என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏன், நான் புதிய சபையைக் கட்டத் தொடங்கினபோது, அதாவது, இங்கே சபையிலேயே அது கூறப்பட்டு வந்தது, “நமக்கு அற்புதங்கள் தேவையில்லை. நமக்கு இனிமேல் இந்தக் காரியங்கள் தேவையில்லை. உங்களுக்கு அவைகள் வேண்டுமானால், அவைகள் சம்பவிக்கிறது அந்த இடத்திற்கு போங்கள். எங்களுக்கு அவைகள் இங்கே வேண்டியதில்லை” என்றனர். பிரான்ஹாம் கூடாரம் அந்த தாழ்வான நிலைக்கு தாழும்போது, அது மூழ்கிவிடுகிறது. 113 இந்த சபையானது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் வல்லமை மற்றும் கொள்கைகளின் பேரில் நிறுவப்பட்டது. மேலும் இந்தக் கூடாரம் இருக்கும் வரை, மகிமையான பரிசுத்த ஆவியானவர் ஆத்துமாக்களுக்கான அணுகலை கண்டறிந்து, இரட்சித்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பி, வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவாராக. எனக்கு, இது நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாயுள்ளது. நாம் ஜெபம் செய்வோமாக. 114 அவர் யாராக இருக்கிறார் என்பதை நீங்கள் அறியாமலிருந்தால், இவை அனைத்தும் என்னவென்பதைக் குறித்து நீங்கள் அறியாமலிருந்தால், நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய கரத்தை உயர்த்துவதனால் நீங்கள் அதைச் செய்வீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துவதன் மூலம், “நான் அவரை அறிந்துகொள்ளும்படி, சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சுற்றிலும், நான் உங்களுடைய கரங்களைக் காண்கிறேன். 115 இப்பொழுது, பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த செய்திக்கு, தங்களுடைய கரங்களை உயர்த்தின ஜனங்களை கனிகளாக கொண்டு வருகிறோம், அதாவது அவர்கள் இவர் யார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த மகத்தான இயேசுவானவரோடு அவர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதாவது அவருடைய வருகையும், உயிர்த்தெழுதலும், மிகவும் சமீபமாக இருக்கின்றபடியால், வியாதியஸ்தர் சுகமடைய தொடங்கியிருக்கிறார்கள். அது சம்பவித்த பிறகு, அதன்பின்னர் தீர்க்கதரிசனம் சபைக்கு வந்தது, அதன்பின்னர் வரங்களும் அற்புதங்களும் நிகழ்ந்தன, இப்பொழுது அந்த கடைசி அடையாளத்துக்கு சென்றுள்ளது. அடுத்து வருவது, எடுத்துக் கொள்ளப்படுதலே, சபையானது எடுத்துக்கொள்ளப்படும். கர்த்தாவே, உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் உம்மை அறிந்திருப்பதாக உரிமைகோரியிருக்கிற நாங்கள், “கர்த்தராகிய இயேசுவே, வாரும்!” என்று கெஞ்சிக்கொண்டும், கதறிக்கொண்டும், வாசித்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருக்கிறோம். 116 கர்த்தாவே, உம்முடைய சபையை சீக்கிரமாக, எடுத்துக்கொள்ளப்படுதலில் கொண்டு செல்லும். ஏனென்றால், சீக்கிரத்தில், மனிதர்கள் ஜீவிப்பதற்காக நீர் சிருஷ்டித்த பூமியை அவர்களே வெடிக்கச் செய்யப் போகிறார்கள், ஏனென்றால் அவர்கள் உமக்கு கீழ்படியாதிருக்கிறார்கள். அவர்கள் சமாதானத்தையல்ல, யுத்தத்தையே படித்தறிந்திருக்கிறார்கள். அவர்கள் நீதியை படித்தறிந்திருக்கவில்லை, ஆனால் அவர்கள் தீவினையைப் படித்தறிந்துள்ளனர். எப்படியோ அவர்கள் வல்லமைக்கான பசியாயிருக்க விரும்பவில்லை! கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தில் உள்ள அந்த சிறு இடமானது வல்லமைக்கான பசியை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது, அவர்கள் தங்களுடைய சக மனிதனை பெருமையாகப் பேச, எங்கோ ஒரு ஆய்வகத்தில் அதை திருப்திப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 117 தேவனே, அவர்கள் வாஞ்சிக்கின்ற அந்த வல்மையானது, தேவகுமாரனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமை என்பதையும், அவர்களுடைய ஜீவியங்களை மாற்றக்கூடிய பரிசுத்த ஆவியின் வல்லமை என்பதையும்; அது தேசங்களை வெடிக்கச் செய்ய அல்ல என்பதையும், ஆனால் அவர்களுடைய ஜீவியங்களை மாற்ற மற்றும் உம்முடைய ஊழியக்காரர்களாக அவர்களை உருவாக்கவுமே என்பதையும், அவர்களால் தெளிவாக உணர முடிந்தால் நலமாயிருக்குமே. 118 அநேக ஜனங்கள் காட்டுத்தனமான வெறித்தனத்தினால் பாதிக்கப்பட்டு, அவர்கள் எங்களை, “ஒன்றுமே அறியாத ஒரு கூட்டம்” என்றும், மற்றும்—மற்றும் “மதவெறியர்கள்,” என்றும், அவர்கள் ஆரம்ப நாட்களில் செய்தது போல எங்களை அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லுகையில், களிகூர்ந்து, உம்முடைய நாமத்தினிமித்தம் நிந்தையை சுமக்க முடிந்ததற்காக உமக்கு நன்றி கூறினார்கள். கர்த்தாவே, இன்றிரவு, எங்குமுள்ள, உம்முடைய பிள்ளைகளின் உணர்வும் அதுவேயாகும். நாங்கள் மாத்திரமே மகிழ்ச்சியாய் இருக்கிறோம். 119 உம்முடைய நாளில் சிலர் உண்மை அடையாளம் கண்டுகொள்ள முயன்றனர். அவர்கள், “போதிய ஆடை அணியாமல், தன்னைச் சுற்றி ஒரு பழைய ஆட்டுத் தோலை சுற்றிக்கொண்டு, வனாந்திரத்திலிருந்து வந்த, யோவான். கிழக்கு மேற்கு என்று, வார்த்தைகளை சரியாக பேசத் தெரியாத ஒரு காட்டு மனிதனாய், ‘கோடாரியானது மரத்தின் வேரருகே வைக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறின ஒரு காட்டு மனிதனின் சினேகிதனாய் இருக்கிறார்” என்றனர். “அவர் இவனைப் பின்பற்றுகிற ஒருவர்—ஒருவர். அவன் ஒரு காட்டு மனிதன். அவன் பைத்தியக்காரன். அவன் புத்திக் கெட்டவன்” என்றனர். ஓ, கர்த்தாவே, உம்மோடிருந்த இயற்கைக்கு மேம்பட்ட ஊழியம், அவர்களின் கண்களை குருடாக்கினது. 120 அது மீண்டும் இன்றைக்கு அவ்வாறே உள்ளது: யோவான் அவனுடைய நாளில் செய்தது போல, இந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் கர்த்தருடைய வருகையை முன்னறிவித்து, காண விரும்பாத, அந்த ஜனங்களை குருடாக்குகிறார். ஆனால் காண விருப்பமுள்ளவர்களை, நீர் அவர்களை தெரிந்துகொண்டிருக்கிறீர். நீர், “பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்திற்கு வரும்” என்றும், “அவர்களில் ஒருவரும் இழக்கப்படமாட்டார்கள். நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்” என்றீர். நாங்கள் இதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். 121 இன்றிரவு, தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறவர்களுக்காக, ஓ தேவனாகிய கர்த்தாவே, நீர் உம்மை அவர்களுக்கு அனுபவத்தில், உயிர்த்தெழுதலின் வல்லமையில், தெரியப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இதை அருளும். 122 தங்களுடைய கரங்களை உயர்த்தாத, மற்றவர்கள் இங்கு இருக்கலாம், ஆனால் அதே சமயத்தில், அவர்களுடைய இருதயத்தில், அவர்களுக்கு அது தேவைப்பட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். நீர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை அவர்களுக்கு தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 123 இன்றிரவு, நாங்கள் கட்டிடத்தை விட்டுச் செல்லும்போது, நாங்கள் வித்தியாசமான ஜனங்களாக செல்வோமாக. நாங்கள் உள்ளே வரும்போது, கொண்டிருந்த நோக்கம், உம்முடைய தெய்வீக சித்தத்திற்கு முரண்பட்டதாக இருந்திருந்தால், நாங்கள் அதைவிட ஒரு வித்தியாசமான நோக்கத்தோடு செல்வோமாக. நாங்கள் உம்மோடு கொண்டிருந்த அனுபவம் எங்கள் ஆத்துமாவை திருப்திப்படுத்தும் வரையில், நாங்கள் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொள்வதற்கான ஒரு தீர்மானத்தோடு வெளியே செல்வோமாக, நாங்கள் யாரைக் குறித்து பேசுகிறோம் என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் நாங்கள் அவரை சந்தித்து அவரை அறிந்து, அவரோடு ஐக்கியங்கொண்டிருக்கிறோம். பிதாவே, இந்த காரியங்களை அருளும். வியாதியஸ்தரையும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் சுகப்படுத்தும். 124 எங்களுடைய அருமையான விலையேறப்பெற்ற போதகரை ஆசீர்வதியும். தேவனே, நீர் அவரோடும் மற்றும் அவருடைய அருமையான சகோதரிகளோடும், அவர்கள் சுவிசேஷ பாடல்களை பாடும்போதும், தங்களுடைய வானொலியில் அதை பிரசங்கிக்கும் போதும், அவர்களோடிருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 125 எங்களுடைய வாசல்களில் இருக்கிற அந்நியர்களை ஆசீர்வதியும். கர்த்தாவே, இன்றிரவு, அவர்கள் தங்களுடைய இருதயத்தில் ஒரு பாரத்தோடு, இந்த வேளையிலிருந்து, அவர்கள் ஒரு நோக்கத்தோடு வெளியே செல்வார்களாக, இதற்கு முன்பு, அவர்களை உம்மை அறியாமல், உமக்கு சேவை செய்யாதிருந்திருந்தால், அவர்கள் உம்மை சேவிப்பார்களாக. “மற்ற எல்லா காரியங்களும் ஒன்றுமற்றதாகும் என்றும், ஆனால் கர்த்தருடைய வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்” என்றும், இதை அறிந்திருக்கிறோம். பிதாவே, இதை அருளும். 126 எங்களுடைய எல்லா பாவங்களையும், எங்களுக்கு மன்னியும். நாங்கள் அந்த மகத்தான…சந்திப்போமாக. [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 127 இப்பொழுது, செய்திக்குப் பிறகு, நாம் அவரிடத்தில் பாடுகையில், நாம் அப்படியே நம்முடைய தலைகளைத் தாழ்த்தி அவரை ஆராதிப்போமாக. நான் அவரை நேசிக்கிறேன், (உங்களுடைய முழு இருதயத்தோடு) நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 128 எத்தனை பேர் அவரை உண்மையாகவே நேசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் அவரை நேசிக்கிறேன்” என்பதற்கு ஒரு சாட்சியாக இதைக் கூறுங்கள். ஓ, அவர் அற்புதமானவரல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] உங்களுக்குத் தெரியும், நான் இந்த விதமாக அமர்ந்து, எப்படியாவது, அவருடைய பிரசன்னத்தில் அப்படியே பருக விரும்புகிறேன். அவருடைய வார்த்தை, புறப்பட்டுச் சென்றது, அது இருதயங்களுக்குள் விழுந்துள்ளது. அது நம்மைத் திருத்துகிறது. அது நம்மை அவருடைய ஆவிக்கு கீழ்படிதலுக்குக்குள்ளாகக் கொண்டு வருகிறது. அப்படியானால் அவரை ஆராதிக்கும்படி இது எவ்வளவு அருமையானதாயுள்ளது! இப்பொழுது, இன்றிரவு, நீங்கள் சபையிலிருந்து செல்லும்போது, அவரை ஆராதிக்கொண்டே, செல்லுங்கள். 129 இந்த வாரம், புதன்கிழமை இரவு இங்கே ஒரு ஜெப கூட்டம் உண்டு என்பதை, நினைவில் கொள்ளுங்கள். டபிள்யூ எல் ஆர் பி என்ற ஒளிபரப்பில் ஞாயிற்றுக்கிழமை, இல்லை சனிக்கிழமை, ஒன்பது மணிக்கு, சகோதரன் நெவிலுனுடைய ஒளிபரப்பை மறந்துவிடாதீர்கள். நான் அவைகளைக் கேட்க விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? அது நால்வர், அல்லது மூவர் குழு, அழகாக தொனிக்கிறது. நானும் மனைவியும், பிள்ளைகளும், நாங்கள் யாவரும் அந்த சிறிய வானொலியில், சகோதரர் நெவில் பேசுவதையும் அவருடைய ஒலிபரப்பையும், அவருடைய அற்புதமான வார்த்தைகளையும், அவர் நேசிக்கிற மற்றும் விசுவாசிக்கிற தேவனை எப்படி உயர்த்துகிறார் என்பதையும் கேட்க, அதைச் சுற்றி அமர்கிறோம். இதற்கு…கூறாதீர்கள். 130 இங்கு இருக்கிற அந்நியர்களாகிய நீங்கள், உங்களுக்கு ஒரு சொந்தமான சபை இல்லாவிடில், எங்களோடு வந்து சேர்ந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர் இங்கே அமரந்துகொண்டிருக்கிறார் என்று இதைக் கூறவில்லை. இல்லை, ஐயா. அநேகமுறை, நான் இதைக் கூறினேன். நான் சகோதர நெவிலை நேசிக்கிறேன். இது, முதலாவது, அவர் ஒரு வேத பண்டிதர். முதலாவது காரியம், அவர் ஒரு தேவனுடைய பிள்ளை. அடுத்த காரியம், அவர் ஒவ்வொரு நாளும் ஒரேவிதமாக இருக்கிறார். நான் அவரை பல வருடங்களாக அறிந்துள்ளேன். அவர் ஒரு துளியும், ஒருபோதும் மாறவேயில்லை. அவர் இன்னமும் ஆர்மன் நெவிலாக, கர்த்தராகிய இயேசுவின் ஒரு ஊழியக்காரனாக இருக்கிறார். மேலும் அவர் பெற்றுள்ளார்…என்று நான் நினைக்கிறேன். 131 அன்றொரு இரவு, நான் அவருக்கு அவருடைய நிகழ்ச்சி ஏதுமில்லையென்றால், வியாதியஸ்தர்களுக்காக நாங்கள் வந்து ஜெபிக்க எங்களுக்காக அந்த நிகழ்ச்சியில் இடமளிக்க முடியுமா என்று அவரிடத்தில் கேட்கும்படி அழைத்தேன். இந்தக் காலை, சிலர் உள்ளே வந்ததை, நீங்கள் அறிவீர்கள். அவருடைய எளிய மனைவி தொலைபேசியில் பதிலளித்தாள், நான் அதைக் குறித்து, அங்கே பின்னால், என்னுடைய மனைவியினிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். 132 அவருடைய அழகான எளிய மனைவிக்காகவும் மற்றும் அவருடைய குடும்பத்திற்காகவும் நாங்கள் எப்படியாய் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அது மிக அருமையாக உள்ளது. நீங்கள் ஒரு ஊழியக்காரனும் அவனுடைய மனைவியும் அந்த விதமாக இனிமையாயும் மற்றும் தாழ்மையாயும் செயல்படுவதைக் காணும்போது, அது சபையை சிறந்த முறையில் நடக்கச் செய்கிறது. நாட்கள் செல்ல செல்ல அது இனிமையாக இருக்கிறது. 133 உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] சரி. இயேவின் நாமத்தைக் உன்னுடன் கொண்டு செல் என்று, நாம் பாடுகிற ஒரு கலைந்து செல்லும் பாடலை நாம் பாட வேண்டும். சகோதரியே, நீங்கள் அந்தப் புத்தகத்தில் அங்கே அதை எடுத்துவிட்டிருந்தால், எங்களுக்கு சிறு சுருதியைக் கொடுங்கள். நாம் நம்முடைய கலந்து செல்லும் பாடலைப் பாடப் போகிறோம். நாங்கள் முதலாம் சரணத்தை பாடும்போது, நாம் சுற்றி திரும்பி ஒருவரோடு ஒருவர் கரங்களைக் குலுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சரி. எங்களுக்கு சுருதியைக் கொடுங்கள். இயேசுவின் நாமத்தை உன்னோடு… துயரமும் துக்கமுமான பிள்ளையே; அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும், நீ எங்கெல்லாம் செல்லுகிறாயோ அதைக் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இப்பொழுது இந்த சரணத்தை நாம் எடுத்துக் கொள்வோமாக. இயேசுவின் நாமத்தில் வணங்கி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம் பரலோகத்தில் இராஜாதி இராஜாவாகிய அவருக்கு நாம் முடிசூட்டுவோம், நம்முடைய யாத்திரை முடிவுறும்போதே. அது அற்புதமாயிருக்காதா? விலையேறப்பெற்ற, விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும்…சந்தோஷமுமாமே 134 குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள் என்று, நாம் வழக்கமாக பாடுகிற நம்முடைய அந்த சிறிய பாடல் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? நான் இல்லை…தெல்மா, அது உங்களுக்குத் தெரியுமா, அல்லது அந்த சுருதியை அல்லது தெரியாதா? நாம் அதை ஒரு முறை முயற்சிப்போமாக. உங்களுக்கு அது நினைவில் இருக்கவில்லையா? நாம்…நான் அதை ஒருமுறை உங்களோடு முயற்சிக்கலாம். குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் ஏற்றுக்கொள்வார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள். 135 எத்தனை பேர் குடும்ப ஜெபம் செய்கிறீர்கள்? அது நல்லது. நாம் அதை மீண்டும் முயற்சிப்போமாக. நான் அதை இங்கே மீண்டும் பாடவுள்ளேன். எனக்கு அது பிடிக்கும் இப்பொழுது யாவரும் ஒன்று சேர்ந்து. வேண்டாம்—குடும்ப ஜெபத்தை மறக்க வேண்டாம். இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் ஏற்றுக்கொள்வார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள். 136 ஓ கர்த்தாவே, அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உருமால்களையும் கச்சைகளையும் எடுத்தபோது, அசுத்த ஆவிகள் ஜனங்களிடத்திலிருந்து புறப்பட்டு சென்றன என்றும், வியாதிகள் குணமாக்கப்பட்டன என்றும் வேத வாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஓ கர்த்தாவே, நான் இவைகளை தேவையுள்ளோருக்கும் வியாதியஸ்தருக்கும் அனுப்பும்போது, இன்றிரவு, அது அந்த விதமாகவே, இவைகளின் மேல் காணப்பட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேசங்களில் எங்கோ வெளியேயுள்ள, யாரோ ஒருவர் இது சம்பவிக்க எதிர்பார்த்துக் கொண்டும் காத்துக்கொண்டும் இருக்கிறார். பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நீர் அதை அருள வேண்டுமென்று, நான் ஜெபிக்கிறேன். ஆமென். 137 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், தேவனுடைய சபையிலிருந்து வந்து, அங்குள்ள நம்முடைய மிக விலையேறப்பெற்ற சகோதரன் ஸ்மித்தை, இப்பொழுது நான் கேட்டுக்கொள்ளப் போகிறேன், இங்குள்ள நம்முடைய சகோதரன் நெவிலைப் போலவே, விசுவாசமும், உண்மையுமுள்ள, ஒரு தேவனுடைய ஊழியக்காரனாக, நாங்கள் அவரைக் கண்டுள்ளோம், இந்த வருகின்ற வாரத்தினூடாக தொடர்ந்து, உங்கள் மீது ஆசீர்வாதங்கள் இருக்கும்படி வேண்டிக்கொள்ள நான் அவரை கேட்டுக்கொள்ளப் போகிறேன். நாங்கள் உங்களை மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 138 சகோதரன் ஸ்மித். [சகோதரன் ஸ்மித் ஜெபிக்கிறார்—ஆசி.] ஆம், கர்த்தாவே. ஆம். ஆம். ஆம். ஆம். ஆமென். 139 ஒருவர் மற்றவருடைய கரங்களைக் குலுக்குங்கள். கூடாரத்துக்கு, மீண்டும் திரும்பி வர வரவேற்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.